குல்புஷன் ஜாதவின் புதிய வீடியோவை வெளியிட்ட பாகிஸ்தான் அரசு..!

பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியர் குல்புஷன் ஜாதவ் பேசும் வீடியோ ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானை உளவு பார்த்ததாக இந்தியக் கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்தநிலையில், கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர், குல்புஷன் ஜாதவை, அவரின் மனைவி மற்றும் அம்மா பாகிஸ்தான் சிறையில் சென்று சந்தித்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த விவகாரமும் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், குல்புஷன் ஜாதவ் பேசும் வீடியோ ஒன்று பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. அதில் பேசும் குல்புஷன், ``என் அம்மா கண்களிலும் மனைவி கண்களிலும் நான் பயத்தைப் பார்த்தேன். அவர்கள் எதுக்காகப் பயப்பட வேண்டும். அவர்கள், மிரட்டப்பட்டிருக்கிறார்கள்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!