உண்மை வென்றிருக்கிறது..! ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம் | Manmohan Singh wrote a letter to A.Raja

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (04/01/2018)

கடைசி தொடர்பு:21:00 (04/01/2018)

உண்மை வென்றிருக்கிறது..! ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், 2 ஜி வழக்கில் தாங்கள் விடுதலையானது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2 ஜி அலைக்கற்றை ஒதுக்குவதில் ஊழல் நடைபெற்றதாக அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கினால், தி.மு.க மற்றும் காங்கிரஸூக்கு நாடு முழுவதும் அவப்பெயர் ஏற்பட்டது. இந்த வழக்கில், ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் சி.பி.ஐ நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. இந்நநிலையில், ஆ.ராசவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், '2 ஜி வழக்கில் தாங்கள் விடுதலையானது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மை வென்றிருக்கிறது. 2 ஜி வழக்கால், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இன்னலுக்கு ஆளாகினர்' என்று குறிப்பிட்டுள்ளார். 


[X] Close

[X] Close