``ஹஜ் இல்லத்துக்கும் காவி வர்ணம்!” - விமர்சனத்துக்குள்ளாகும் ஆதித்யநாத் அரசு

க்னோவில் உள்ள ஹஜ் இல்லத்துக்குக் காவி வர்ணம் அடித்ததாக உத்தரப்பிரதேச அரசுமீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

காவி வர்ணத்தில் ஹஜ் இல்லம்

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற பின், பள்ளிக்கூட பையிலிருந்து பேருந்துகள் வரை அனைத்தும் காவி வர்ணத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. உச்சகட்டமாக லக்னோவில் உள்ள ஹஜ் இல்லமும் தற்போது காவி வர்ணமாகியுள்ளது. ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவரில் காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. 

யோகி அரசின் இத்தகைய செயல்பாட்டுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. காவி வர்ணம் சங்பரிவார் மற்றும் இந்து மதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. அந்த வர்ணத்தை மெக்கா புனித பயணத்துடன் தொடர்புடைய கட்டடத்துக்கு அடிக்கலாம் என்று இஸ்லாமியர்களில் ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

ஆதித்யநாத் அரசில் அமைச்சராக உள்ள மோஷின் ராசா, இதில் ஒன்றும் தவறில்லை. சர்ச்சையும் இல்லை. காவி வர்ணத்தைப் பார்த்தால் நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும். எதிர்க்கட்சியினருக்கு எங்கள் அரசு மீது எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், இதுபோன்ற சர்ச்சைகளை உருவாக்குகின்றனர்'' என்கிறார்.

உ.பி-யில் ஆதித்யநாத் அரசு அமைந்த பிறகு தலைமைச் செயலகம், முக்கிய அலுவலகங்கள், முதல்வர் இல்லம், முக்கிய அதிகாரிகளின் இல்லங்கள் காவி வர்ணத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!