வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (06/01/2018)

கடைசி தொடர்பு:07:46 (06/01/2018)

ட்விட்டரில் மல்லுக்கட்டிய 'ஆளவந்தான்' நடிகை ரவீனா தாண்டன்!

ஆளவந்தானில் கமலுடன் ஜோடி போட்ட ரவீனா தாண்டனின் ட்விட்டர் சண்டைதான்,  சமூக வலைதள விரும்பிகளின்  கறுக் மொறுக் ஸ்நாக்ஸ்.  

ரவீனா

''மும்பையின் பனிப்புகையைப் பாருங்கள். காற்று மாசுபடுதலில் நாமும் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். வெல்டன் மஹாராஷ்டிரா கவர்ன்மெண்ட். மஹாராஷ்டிரா கடந்த மூன்று வருடங்களில் தங்கள் மாநிலத்தின் பெரும்பான்மையான காடுகளை இழந்துவிட்டது. கூடிய விரைவில் ஆரே காடும் அழிந்து விடும். வெல்கம் டு காற்று மாசுபாடு நரகம்'' என்று ரவீனா ட்வீட் செய்ய, ஆரம்பித்தது சண்டை. 

நடிகை

“காற்று மாசுபாட்டை குறைக்க வேண்டுமென்றால் நீங்கள் கார் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு பஸ் அல்லது ரயிலில் பயணம் செய்யுங்களேன்”என்று ஒருவர் கேலி செய்ய, ரவீனா உடனே, “காற்று மாசுபடுவதற்கு முக்கியமானக் காரணம் காடுகளை அழித்ததுதான்.  நான் தனி ஒருவளாக எத்தனை மரங்களை நட்டிருக்கிறேன் தெரியுமா? இது தெரியாமல் பேசாதீர்கள்” என்று சுடச்சுட திருப்பிக் கொடுத்ததுடன், “நீங்கள் வேண்டுமானால் இனி நடந்து செல்லுங்களேன்” டெரர் அட்வைஸும் கொடுத்திருக்கிறார். 

டிவீட்

பிளாக்

தவிர, இப்படி தன்னை கேலி செய்த நபரை பிளாக்கும் செய்துவிட்டார் ரவீனா.