வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (06/01/2018)

கடைசி தொடர்பு:14:05 (06/01/2018)

கார்டியாக் அரெஸ்ட் அபாயம்; ஐயப்ப பக்தர்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள்!

பரிமலை செல்லும் பக்தர்கள், முறையாக இதயப் பரிசோதனை செய்துகொண்ட பின்னரே, மலையேற்றம் மேற்கொள்ள வேண்டுமென திருவாங்கூர் தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சபரிமலை

சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க பம்பையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவு மலை ஏற வேண்டும். ஒவ்வொரு சீசனின்போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். அப்படி புனிதப் பயணம் மேற்கொண்டவர்களில், இந்த சீசனில் மட்டும் 59 பேர் இறந்துள்ளனர். இதில், 28 பேர் கார்டியாக் அரெஸ்டால் இறந்தவர்கள். சபரிமலையில் உள்ள மருத்துவப் பரிசோதனை மையத்தில் 1.7 லட்சம் பேர் பரிசோதனை மேற்கொண்டனர். அதில்,  228 பேருக்கு கார்டியாக் அரெஸ்ட் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 13 ஆயிரம் பேருக்கு இதய நோய் தொடர்பான பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

பக்தர்களின் இறப்பை அடுத்து,  சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள், மருத்துவர்களிடம் இதயப் பரிசோதனையை முறையாகச் செய்துகொள்ள வேண்டும். இதயப் பாதிப்புள்ளவர்கள் மலை ஏறக்கூடாது என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. அதுபோல, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல்பருமன் கொண்டவர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டாமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

''கார்டியாக் அரெஸ்ட் குறித்தும் முறையான விழிப்பு உணர்வு பக்தர்களிடம் தேவை. சபரிமலை புனிதப் பயணத்துக்கு முன், முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்'' என்று சபரிமலை மருத்துவ மைய தலைமை மருத்துவர் டாக்டர். சுரேஷ் பாபு  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க