நான் நிரபராதி என நிரூபிப்பேன்: ஆ.ராசா | நான் நிரபராதி என நிரூப்பேன்: ஆ.ராசா

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (17/02/2011)

கடைசி தொடர்பு:00:00 (17/02/2011)

நான் நிரபராதி என நிரூபிப்பேன்: ஆ.ராசா

புதுடெல்லி, பிப்.17,2011

"நான் நிரபராதி என நிரூபிப்பேன்," என்றார் 2ஜி ஊழல் வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை மார்ச் 3 வரை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்ட பின்பு, சிபிஐ அதிகாரிகளால் டெல்லி திஹார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது நீதிமன்றத்தில் இருந்து காரில் ஏறுவதற்கு முன்பு நிருபர்களிடம் நடந்து கொண்டே ஒரு சில வார்த்தைகள் பேசிய ராசா, "நான் வழக்கை எதிர்கொண்டு, நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்," என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்