வெளியிடப்பட்ட நேரம்: 04:47 (09/01/2018)

கடைசி தொடர்பு:08:05 (09/01/2018)

10 மாதங்களாக பழுதாகி நிற்கும் அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பல் அரிஹந்த்

ழுதடைந்த அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் அரிஹந்த், கடந்த 10 மாத காலமாக விசாகப்பட்டினம் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அரிஹந்த் கப்பல்

அணுசக்தியில் இயங்கும் இந்தியாவின் ஒரே நீர்மூழ்க்கிக் கப்பல் அரிஹந்த். 10 மாதங்களுக்கு முன்னர், விசாகப்பட்டினம் துறைமுகத்துக்குள் அரிஹந்த் நுழைந்தபோது, தவறுதலாக கப்பலின் பின்புற வாயில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் உள்ளே புகுந்த வேகத்தில், கப்பலை முன்னோக்கிச் செலுத்தும் புரொப்லர் அடங்கிய பகுதி சேதமடைந்துவிட்டது. அங்கிருந்த பைப்புகள் உடைந்துள்ளன. இவற்றை மாற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 

ரஷ்யாவிடமிருந்து 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்குப் பெறப்பட்ட ஐ.என்.எஸ்.சக்ரா என்ற மற்றோர் அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல், பயிற்சி மற்றும் ரோந்துப் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், அரிஹந்த் அணு ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் திறன்படைத்தது. டோக்லாம் விவகாரத்தின்போதே அரிஹந்த் பழுதாகியுள்ளது. ஆனால், தகவல் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை சீனாவுடன் போர் மூண்டிருந்தால், அரிஹந்த்தைப் பயன்படுத்த முடியாமல் போயிருக்கும். 

இந்தக் கப்பலில், 83 மெகாவாட் சக்திகொண்ட அணு ஆயுத உலை உள்ளது. 100 பேர் பணியாற்றுகிறார்கள்.  Advanced Technology Vessel (ATV) என்ற திட்டத்தின் அடிப்படையில், 6 ஆயிரம் டன் எடை கொண்ட அரிஹந்த் தயாரிக்கப்பட்டது. 750 கிலோ மீட்டர் சென்று தாக்கும் கே-15 ஷாகாரீகா  ரக ஏவுகணை, 3,500 கி.மீ தொலைவு பாயும் கே-4 ரக ஏவுகணைகள் நான்கையும் சுமந்துசென்று தாக்கும் திறன்கொண்டது அரிஹந்த். 

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள்தான் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருந்தன. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மற்றோர் அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல், அரிதாமன். இது, தற்போது பரிசோதனையில் உள்ளது. 2019-ம் ஆண்டு, அரிதாமன் கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க