வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (09/01/2018)

கடைசி தொடர்பு:11:01 (09/01/2018)

`முடிந்தால் பிடித்துப்பாருங்கள்!' - நாதுராம் ஃபேஸ்புக்கில் கொக்கரிப்பு

ன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் சாவுக்குக் காரணமான ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம், 'முடிந்தால் என்னைப் பிடித்துப்பாருங்கள்' என்று  போலீஸாருக்கு ஃபேஸ்புக்கில் சவால் விடுத்துள்ளார். 

கொள்ளையன் நாதுராம்

கொளத்தூரில் நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், நாதுராம் என்ற கொள்ளையனைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழக போலீஸார், டிசம்பர் 13-ம் தேதி தாக்கப்பட்டனர்.  அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியால் சுட , தவறுதலாக இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாதுராம் அவரின் கூட்டாளிகளைப் பிடிக்கமுடியாமல் போலீஸார் தமிழகம் திரும்பிவிட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை,  நாதுராம் ஃபேஸ்புக் பக்கத்தில், ஜாட் ராஜ் என்ற பெயரில் புதிய புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், 'முடிந்தால் என்னை பிடித்துப்பாருங்கள்' என்றும் சவால் விடுக்கப்பட்டுள்ளது. ஜாட் மக்களிடையே தன்னை ஒரு ஹீரோ போல காட்டிக் கொள்ளும் வகையில்  இந்தப் புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 4 வார காலமாக ராஜஸ்தான் மற்றும் தமிழக போலீஸார்  நாதுராமை தேடி வரும் நிலையில், ஃபேஸ்புக்கில் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. அதில், காட்டுக்குள் கையில் ரிவால்வாருடன் நாதுராம் இருக்கிறான்.

இந்தப் புகைப்படத்தைவைத்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன்  நாதுராமைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, நாதுராமின் மனைவி மஞ்சு, கூட்டாளி தினேஷ் ஆகியோரை ராஜஸ்தான் போலீஸார் கைதுசெய்து விசாரித்தும், நாதுராமைப் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க