கட்டாந்தரைதான் வகுப்பறை... கால்வாய் நீர் குடிநீர்...சப்பாத்தியும் உப்பும் மதிய உணவு! பள்ளிக்கூடத்தின் அவல நிலை

பள்ளி

மத்தியப்பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டம் சுர்ஜாபூர் பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. பெயர் மட்டும்தான் பள்ளி. மற்றபடி பள்ளிக்கென்று கட்டடம் எதுவும் இல்லை. வெட்டவெளியில்தான் குழந்தைகள் கல்வி கற்கிறார்கள். ஆசிரியர்களும் வெயிலில் நின்றுதான் பாடம் கற்பிக்கிறார்கள்.

பள்ளி


பாடம் நடத்தும் இடத்துக்கருகே சிறிய கால்வாய் ஒன்று ஓடுகிறது. அதில் வரும் தண்ணீரைத்தான் குழந்தைகள் குடிநீராக அருந்துகிறார்கள். சுகாதாரமற்ற அந்த நீரால் உடல் கோளாறு ஏற்படும் அபாயமும் உள்ளது. மதிய உணவாகக் குழந்தைகளுக்கு சப்பாத்தியும் உப்பும் வழங்கப்படுகிறது.

அங்கு படிக்கும் குழந்தகைள் அனைவரும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக்குழந்தைகள். இவர்கள், வெட்டவெளியில் வெயிலில் அமர்ந்து பாடம் கற்பதுபோன்ற புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவை, பொதுமக்கள் மத்தியில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம், இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!