வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (09/01/2018)

கடைசி தொடர்பு:13:50 (09/01/2018)

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை..! - உச்ச நீதிமன்றம் அதிரடி

திரையங்குகளில் தேசிய கீதம் இசைக்கவேண்டிய கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியா முழுவதுமுள்ள திரையரங்குகளில் கட்டாயம் தேசிய கீதம் இசைக்கவேண்டும். அப்போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்துநிற்கவேண்டும் என்று 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக பா.ஜ.கவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 'திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல. இதுகுறித்த பழைய உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. அதனையடுத்து, இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், 'தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு உரிய மரியாதை கொடுக்கவேண்டும். அதனால், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கவேண்டிய கட்டாயமில்லை' என்று உத்தரவிட்டனர்.