வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (09/01/2018)

கடைசி தொடர்பு:18:40 (09/01/2018)

விமானத்தில் அமெரிக்க டாலரைக் கடத்திச் சென்ற பணிப்பெண்..!

டெல்லியிலிருந்து ஹாங்காங்குக்கு விமானத்தில் அமெரிக்க டாலரைக் கடத்திச் சென்ற விமானப் பணிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 


ஜெட் ஏர்வேஸ் விமான நிறுனத்தில் தேவ்ஷி குல்ஷெரிஸ்தா என்பவர் விமானப் பணிப் பெண்ணாகப் பணியாற்றிவந்தார். அவர், நேற்று அதிகாலையில் டெல்லி விமான நிலையத்திலிருந்து ஹாங்காங் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்துள்ளார். வருவாய்த்துறை அதிகாரிகள் விமானத்தில் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, பணிப்பெண்ணிடம் இருந்து 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.