வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (09/01/2018)

கடைசி தொடர்பு:21:40 (09/01/2018)

பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம்..! லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றது

மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மட்டுங்கா ரயில்நிலையம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 

மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ளது மட்டுங்கா புறநகர் ரயில்நிலையம். இந்த நிலையம் கடந்த ஜூலை மாதம் முதல் முழுவதும் பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்திலுள்ள ரயில்வே காவலர்கள், சிக்னல் பிரிவு ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என இந்த ரயில் நிலையத்தில் பணியாற்றும் 41 ஊழியர்களும் பெண் ஊழியர்கள்தாம். பெண்களுக்கு அதிகாரங்களை அளிக்கும் வகையிலும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.