டாக்டராக விரும்பும் அப்சல் குருவின் மகன்!

நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் கைதாகி தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மகன் காலிப் அப்சல் குரு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளார்.

அப்சல் குரு

 

2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய அப்சல் குரு உள்ளிட்டவர்கள், பின்னர் கைதுசெய்யப்பட்டனர். அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருடைய தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது. இதையடுத்து, 2013-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, திகார் சிறையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது.

அப்சல் குரு கைதானபோது, அவர் மகன் காலிப்புக்கு 2 வயது. காலிப், காஷ்மீர் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் பயின்றுவந்தார். அவர், சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. காலிப், 500-க்கும் 441 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ளார். 

தான் டாக்டர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை காலிப் தெரிவித்துள்ளார். காலிப்பின் தாய் தபஸம் குரு, மகன் பெற்றுள்ள மதிப்பெண்களால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். காலிப்பின் டாக்டர் கனவு  நிறைவேற பலரும் வாழ்த்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!