விமானத்தை நிறுத்திய மாடு! அல்லோலகல்லோலப்பட்ட அதிகாரிகள்

அகமதாபாத் விமான நிலைய ஓடுபாதைக்குள் மாடு நுழைந்ததால் இரு விமானங்கள் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டன. 

PLANE

இந்தியச் சாலைகளில் மாடுகளைப் பார்ப்பது இயல்பான ஒன்று. பாதசாரிகளைப் போலவே அவை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். அவற்றால் விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாகும்.

இந்நிலையில், விமான நிலைய ஓடுபாதைக்குள் புகுந்து ஒரு மாடு கலவரம் ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இது நிகழ்ந்துள்ளது. ஓடுபாதைக்குள் மாடு அங்குமிங்கும் ஓடியதால் இரு விமானங்களை தரையிறக்க முடியவில்லை. அந்த விமானங்கள் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டன. அதில் ஒன்று அரபு நாடுகளிலிருந்து வந்த விமானமாகும். மற்றொன்று சரக்கு விமானம். 

சிறிது நேர ரகளைக்குப் பின்னர் அதிகாரிகளும் ஊழியர்களும் இணைந்து மாட்டைப் பிடித்து அப்புறப்படுத்தினார்கள். விமான ஓடுபாதைக்குள் மாடு புகுந்த தகவலை இந்திய விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் குருபிரசாத் மோகபத்ரா உறுதி செய்தார். விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதி வழியாக அந்த மாடு விமான நிலையத்துக்குள் நுழைந்துள்ளது. விமானங்களின்மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அதிகம் நிகழும் ஒரு விமான நிலையமாகவும் அகமதாபாத் விமான நிலையம் திகழ்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!