வெளியிடப்பட்ட நேரம்: 09:36 (12/01/2018)

கடைசி தொடர்பு:11:30 (12/01/2018)

விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100 வது செயற்கைகோள் ! - வெற்றிக்கொண்டாட்டத்தில் இஸ்ரோ

இஸ்ரோ

இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளை சுமந்துசெல்லும் பி.எஸ்.எல்.வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி சி-40, 1,323 கிலோ எடை கொண்ட 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இதில் 3 இந்திய செயற்கைக்கோள்களும், 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் உள்ளன.

இஸ்ரோ

இஸ்ரோவின் வடிவமைப்பான, கார்டோசாட் - 2  செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டில், மூன்று இந்திய செயற்கோள்களும், அமெரிக்கா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் செயற்கைக்கோள்கள் 28ம் உள்ளன. கார்டோசாட் - 2, செயற்கைக்கோளின்  எடை 710 கிலோ. 
ராக்கெட் ஏவப்பட்ட  2.21 மணி நேரத்தில், பூமியில் இருந்து, 505 கி.மீ., உயரத்தில், புவிவட்டப் பாதையில் கார்டோசாட் - 2 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட் காலம் 5 ஆண்டுகள்.

கார்டோசாட் - 2 செயற்கைக்கோளில் துல்லியமாக படமெடுக்கும் கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. எனவே,  பூமியின் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் இருந்து படமெடுத்து அனுப்பும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க