வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (12/01/2018)

கடைசி தொடர்பு:12:23 (12/01/2018)

பாவ்பாஜி, பீட்சா, பிரியாணி, பீடா... வைரலாகும் மும்பை ஜோடியின் ஃப்ரீ வெடிங் போட்டோ ஷூட்!

சாப்பாட்டுக்காக திருமணங்களில் பிரச்னை வந்தது அந்தக்காலம். சாப்பாடு இல்லாமல்கூட திருமணங்கள் நடக்கிறது, ஆனால், ப்ரீ வெடிங் போட்டோ ஷூட் இல்லாமல் இப்போது திருமணங்கள் நடைபெறுவதேயில்லை. ஆகாயத்தில், கடலுக்கடியில், ஓடும் ரயிலில், ஒற்றைப் பனைக்கு அடியில் என்று வித்தியாசமாக ப்ரீ வெடிங் ஷூட் நடத்துகிறார்கள்.

பொதுவாக, போட்டோ ஷூட்டில், பெரும்பாலும் பூக்கள், மரங்கள் பின்னணியில் மணமக்களை வைத்து எடுக்கிற டெம்ப்ளேட் போட்டோக்களைத்தானே இதுவரைப் பார்த்திருக்கிறோம். மும்பையைச் சேர்ந்த விசாகாவும்,  வினித்தும் கொஞ்சம் மாத்தியோசித்து, தங்கள் இருவருக்கும் பிடித்த உணவுகளுடன் போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாவில் ஏற்றியதிலிருந்து, சமூக வலைதளம் முழுக்க ஒரே மசாலா மணம்தான் போங்கள்.

மும்பை ஜோடி

இந்த ஐடியா, யாருக்கு முதலில் வந்தது என்று விஷாகாவிடம் கேட்டோம்.  கல்யாணப்பொண்ணு லைட்டா வெட்கப்பட்டபடியே பேசினாங்க. 

''ஃப்ரீ வெடிங் போட்டோ ஷூட் பண்ணனும்னு நாங்க பேச ஆரம்பிக்கும்போதே, எதாவது வித்தியாசமா செய்யணும்னு முடிவெடுத்துட்டோம். அதுவும் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச பொதுவான விஷயமா இருக்கணும்னு யோசிச்சப்போ வினித் தான், இந்த 'ஃபுட்' ஐடியாவை கொடுத்தார். ஏன்னா, நாங்க ரெண்டு பேருமே லவ் பண்ணிக்கிடிருந்தப்போ சாய் குடிக்கிறதுக்கு ஒரு கடை, தந்தூரி சிக்கன் சாப்பிடறதுக்கு ஒரு கையேந்தி பவன், பீடா வாங்கி சாப்பிட ஒரு ஷாப்னு தேடித் தேடி ரசிச்சு ருசிச்சுதான் சாப்பிடுவோம். இதையே எங்க போட்டோ ஷூட்டுக்கு ஐடியாவாக்கிட்டோம். நாங்க ஷூட் பண்ணப் போன இடமெல்லாம் நாங்க அடிக்கடி போற இடம்கிறதால எல்லாரும் ஹேப்பியா எங்களுக்கு சப்போர்ட் பண்ணாங்க'' என்று சிரிக்கிறார் விஷாகா.

ஓகே, விஷாகா -  வினித்தோட சில போட்டோஸை ரசிக்கலாமா..?

  ஷூட்

கண்களில் ஜில்லென்று ஒரு காதல்; கைகளிலோ சுடச்சுட டீ

ஃப்ரீ ஷூட்

 நம் சமயலறையில் நீ பிரெட்டா, சாண்ட்விச்சா..?

ப்ரீ ஷூட்

 இதுதான் ஃபேமிலி பிட்சாவா?!

ப்ரீ ஷூட்

தெய்வீகக் காதலில் கோயில் பிரசாதம் இல்லாமலா...

ப்ரீ ஷூட்

 நூடுல்ஸை பிரேக் பண்ணாம சாப்பிட்டா , நமக்குள்ள பிரேக் அப்பே வராதுன்னு சித்தி விநாயகர்கிட்ட வேண்டிக்கிட்டிருக்கேன் வினீத்...

ப்ரீ ஷூட்

 மீனோட சைஸ் லைட்டா பெரிசாயிடுச்சோ...

ப்ரீ ஷூட்

 எங்களுக்குப் பிடித்த பட்டரி பாப்கார்னுடன்..

ப்ரீ  ஷூட்

 டயட் இருக்க வேண்டிய நேரத்துல இவ்வளவு சோதனையா?

பாவ் பாஜி

 ரோட்டோரக் கடையில் பாவ்பாஜி

ப்ரீ வெடிங் ஷூட்

 பீடா போட்டு போட்டோஷூட்டை முடிக்கிறோம். 

ப்ரீ வெடிங் ஷூட்

 இன்னிக்குதான் எங்க கல்யாணம். கட்டாயம் வந்துடுங்க...


டிரெண்டிங் @ விகடன்