உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் மோடியின் முதன்மைச் செயலாளர் திடீர் சந்திப்பு!

உச்சநீதிமன்ற  நீதிபதிகள் 4 பேரின் திடீர் பேட்டி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

nirpendra
 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர்  நேற்று, 'உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை' என்று ஊடகங்கள் முன்பு பரபரப்பு குற்றம்சாட்டினார்கள். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பதவி வகிப்பவர்கள் ஊடகத்தினரைச் சந்தித்து இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பிரதமரின் முதன்மைச் செயலாளர் நிருபேந்திரா இன்று காலை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை டெல்லியில் உள்ள தீபக் மிஸ்ராவின் வீட்டின் முன்பு நிருபேந்திரா காரில் இருப்பது போன்ற புகைப்படத்தை ANI ஊடகம் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. பிரதமர் மோடியின் சார்பில் நிருபேந்திரா தீபக் மிஸ்ராவை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!