40 பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து! - சுற்றுலாவின்போது நிகழ்ந்த சோகம்

மகாராஷ்டிராவின் தகானு கடற்கரையில், 40 பள்ளிக் குழந்தைகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவர்களில் 35 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 2 குழந்தைகளின் சடலம் கிடைத்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

படகு விபத்து
 

மகாராஷ்டிரா மாநிலம், பல்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு என்ற பகுதியில்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில், சுற்றுலா வந்த 40 பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு,  கடலில் இருந்து 3.7 கி.மீ தூரத்தில் சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்தது. அளவுக்கதிகமாக மாணவர்களை படகில் ஏற்றியதே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 40 குழந்தைகளில் 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டுவிட்டனர். இரண்டு குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

mumbai
 

 எஞ்சிய குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடலோரப் பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளது. நீரிறங்கு விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளைப் படகில் கூட்டிச் செல்லும்போது லைஃப் ஜாக்கெட்கூட வழங்கவில்லை என்பதுதான் இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!