“தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது”! கர்நாடக முதல்வர் சித்தராமையா பதில்

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதில் அளித்துள்ளார்.

சித்தராமையா

 

தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீர் கிடைக்காததால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள் விவசாயப் பணிகள் மேற்கொள்ள இயலாத சூழல் நிலவுகிறது. தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீரை கேட்டுப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரியில் தமிழகத்தின் பங்கு நீரை தரக் கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக்கடிதத்தில் இப்போதைய நிலவரப்படி கர்நாடகா தமிழகத்துக்கு 14 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். இங்கு விவசாயம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதால் அதில் 7 டி.எம்.சி தண்ணீரையாவது காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 
ஆனால், இந்தக் கோரிக்கையை கர்நாடக முதல்வர் சித்தராமையா நிராகரித்துள்ளார். கர்நாடகாவிற்கு தேவையான தண்ணீர் குறைவாக இருப்பதால் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது. காவிரி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் அடுத்த மாதம் இருமாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவோம் என சித்தராமையா பதிலளித்துள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!