மேற்குவங்கத்தில் 20 இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு!

சி.பி.ஐ.

மேற்கு வங்க மாநிலத்தில் சிட்பண்ட் வழக்கு தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடியாக 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Constructioj Market Data (CMD) என்ற நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவரின் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனம் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் சிட்பண்ட் நடத்தி சுமார் 335 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தனியார் சிட்பண்ட் நிறுவன உரிமையாளருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தெற்கு பர்கானாஸ் மாவட்டம் பரய்பூர் கூடுதல் தலைமை நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கின் தொடர்ச்சியாக கொல்கத்தா மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!