’பாம்புக்கு முத்தம் கொடுப்பதும் யானையுடன் விளையாடுவதும் ஆத்மதிருப்தி தரும்!’ - ரியல் ’துருவன்’

பாம்பு மனிதர்

ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் மாவட்டம் உதானி நுவாகோன் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா சந்திர கோச்சாயத். இவரை பாம்புகளின் நேசர் என்றே அந்தப் பகுதி மக்கள் அழைக்கின்றனர். ஏனெனில், இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து இவர் பத்திரமாக காட்டுக்குள் விட்டுள்ளார்.  சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாம்பை கண்டாலே இவரைத் தான் உடனே தொடர்பு  கொள்கிறார்களாம். 

பாம்பு மனிதர்


பாம்புகள் தவிர மற்ற விலங்குகளிடமும் இவர் நெருங்கிப் பழகுகிறார்கள். அவை இவரிடம் வந்து ஒட்டிக்கொள்கின்றன. மான்கள், புலிகள், யானைகள், பறவைகள், சிறுத்தைப் புலிகள், குரங்குகள் என இவர் மீட்ட விலங்குகளின் பட்டியல் நீள்கிறது. காயமடைந்த விலங்குகளுக்கு இவர் சிகிச்சை அளிக்கவும் செய்கிறார். 

பாம்பு மனிதர்


விலங்குகளுடனான நேசம் பற்றி இவர் கூறும்போது, “மிருகங்களுக்கு உதவுவது எனக்கு மிகுந்த ஆத்மதிருப்தி தருகிறது. மிருகங்கள் இல்லையென்றால் காடுகள் இல்லை. காடுகள் இல்லாமல் போனால் மனிதர்கள் இல்லை” என்று சுருக்கமாக முடித்துக் கொள்கிறார்.
கிருஷ்ணா சந்திர கோச்சாயத், பாம்புக்கு முத்தம் கொடுப்பது, யானையுடன் விளையாடுவது, குரங்குக்கு சிகிச்சை அளிப்பது போன்ற படங்களை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவரது பணி தொடரட்டும்.!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!