ஜார்கண்ட்டில் ஆட்டோ மீது லாரி மோதல்..! 12 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் அமைந்துள்ள பார்னோ பிளாக் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், நேற்று இரவு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர். பல்மாதிபா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, வேகமாக வந்த லாரி ஆட்டோமீது மோதியது.

இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம்செய்த 6 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்துவருகின்றனர்.
 
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆட்டோமீது லாரி மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துகுறித்து அறிந்த மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!