வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (17/01/2018)

கடைசி தொடர்பு:16:14 (17/01/2018)

திருப்பூர் மாணவரைக் கொன்ற இன்சுலின்! - தொடரும் மருத்துவ கல்லூரி மர்மங்கள் 

டெல்லியில் உள்ள  யுசிஎம்எஸ்  மருத்துவ கல்லூரியில் படித்த தமிழக மாணவர் சரத்பிரபு சடலமாக மீட்கப்பட்டார். திருப்பூரைச் சேர்ந்த சரத்பிரபு யுசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் எம்.எஸ் படித்து வந்தார். இன்று காலை அவர் தங்கியிருந்த விடுதியில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்ததை சக மாணவர்கள் பார்த்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீஸில் தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியத்தில், சரத்பிரபு தனக்குத் தானே இன்சுலின் செலுத்திக்கொண்டதாக உறவினர்கள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். 

aiims

File photo

இதற்கு முன்னர்,  2016-ம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி மாணவர் சரவணன் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் தனக்குத் தானே விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நடந்த மறுபிரேதப் பரிசோதனையில் கொலைக்கான சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த மற்றொரு மாணவர் சரத்பிரபு தனக்குத் தானே ஊசி போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க