வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (18/01/2018)

கடைசி தொடர்பு:11:06 (18/01/2018)

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்: தமிழக ராணுவ வீரர் வீர மரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், தமிழக ராணுவ வீரர் ஏ.சுரேஷ் வீர மரணம் அடைந்தார். ஆர்.எஸ்.புரா பகுதியில் நடந்த தாக்குதலில் சுரேஷ் பலியாகியுள்ளார். 1976-ம் ஆண்டு பிறந்த சுரேஷ், 1995-ம் ஆண்டில் எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்தார். எல்லை மீறி பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதலில், ஒரு ராணுவ வீரரும் மூன்று பொது மக்களும் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நள்ளிரவு இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.