மனித குல வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதும்..! இந்தியா - இஸ்ரேல் உறவுகுறித்து மோடி பெருமிதம்

``இந்தியா மற்றும் இஸ்ரேல் உடனான கூட்டுறவு மிகவும் அவசியமானது. இரு நாடுகளுக்கிடையேயான இந்த கூட்டுறவு, 21-ம் நூற்றாண்டின் மனிதகுல வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதும்'' என்று பிரதமர் மோடி பேசினார். அகமதாபாத் புறநகரில் அமைந்துள்ள ஐக்ரியேட் வசதியை பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாஹூ ஆகியோர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தனர்.

பிரதமர் மோடி

கண்டுபிடிப்பு, பொறியியல், பொருள்கள் வடிவமைப்பு போன்றவற்றின் மூலம் தொழில்முனைவதற்கான வசதியையும் மற்றும் உணவு பாதுகாப்பு, தண்ணீர், இணைப்பு, இணையபாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு, எரிசக்தி, உயிரி-மருத்துவ சாதனம் மற்றும் கருவிகள் போன்றவற்றில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாக கொண்டு சுயசார்பான மையமாக ஐக்ரியேட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தரமான தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கான சுற்றுச்சூழலை உருவாக்குவதே ஐக்ரியேட்டின் இலக்காகும்.

பிரதமர் மோடி, ''இந்தியா மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் நெருக்கத்தைக் கொண்டு வருவதற்கு கண்டுபிடிப்பு முக்கிய பங்காற்றுகிறது. ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலின் தொழில்நுட்ப ஆற்றலையும், கண்டுபிடிப்பையும் அறிந்துள்ளது. இந்திய இளைஞர்கள் ஆற்றலும், உற்சாகமும் மிக்கவர்கள். சிறிதளவு ஊக்கமும், நிறுவன ஆதரவு மட்டுமே இளைஞர்களின் தேவையாக உள்ளது. ஒட்டுமொத்த அமைப்பையும் கண்டுபிடிப்பிற்கேற்ற சூழ்நிலையாக உருவாக்கிட அரசு உழைத்து வருகிறது என்றும், ஆகவே, ஆர்வம் உத்திகளை உருவாக்கும்; உத்திகள் கண்டுபிடிப்புகளை அடையச் செய்யும் மற்றும் கண்டுபிடிப்புகள் புதிய இந்தியாவை உருவாக்க உதவும்.

வெற்றிக்கு முதலாவது அடிப்படையான தேவை வீரம். ஐக்ரியேட்டில் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வீரமிக்க இளைஞர்களை நான் பாராட்டுகிறேன். நாட்டை எதிர்கொண்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும், குறைந்த செலவில் சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் இந்திய இளைஞர்கள் கண்டுபிடிக்க வேண்டும். உணவு, தண்ணீர், உடல்நலம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் கண்டுபிடிப்புக்காக இந்தியா மற்றும் இஸ்ரேல் உடனான கூட்டுறவு மிகவும் அவசியமானது. இரு நாடுகளுக்கிடையேயான இந்த கூட்டுறவு, 21-ம் நூற்றாண்டின் மனிதகுல வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!