வெளியிடப்பட்ட நேரம்: 08:17 (19/01/2018)

கடைசி தொடர்பு:09:13 (19/01/2018)

இன்றைய (19.01.2018) பங்கு சந்தை... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ் அண்ட் பி 500 இண்டெக்ஸ் 2798.03 (-4.53) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 26017.81 (-97.84) என்ற அளவிலும் முடிவடைந்தது. நியூயார்க் ஸ்பாட் சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1326.85 (+0.25) டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குருடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 69.31 டாலர் என்ற அளவிலும் இருந்தது.

stock market

டாலரின் மதிப்பு ரூபாயில்

நேற்று டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 63.8431 என்ற அளவில் இருந்தது. நிப்டி முக்கிய சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள் 10817ல் குளோசான நிப்டி டெக்னிக்கலாக 10770/10724/10684 போன்ற லெவல்களை சப்போர்ட்டாகவும், 10876/10934/10934 போன்ற லெவல்களை ரெசிஸ்டன்ஸாகவும் கொண்டிருக்கின்றது.

நிப்டியைப் பொறுத்தவரை 18-01-18 அன்றைய டிரேடிங்கில் 10887.50 என்ற உச்சத்தைத் தொட்டு பின்னர் நாளின் இறுதியில் 10817 என்ற அளவில் 28.45 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. நேற்றைய ஏற்றத்துக்கு வங்கிகளின் பங்குகளின் விலை ஏற்றம் ஒரு காரணமாக இருந்தது. நிப்டி மேல் நோக்கிச் செல்லும்போது லாபத்தை புக் செய்துகொள்ளும் வண்ணம் டிரேடர்கள் விற்பனை செய்கின்றனர் என்று சொல்லும் அளவுக்கே நிலைமை இருக்கின்றது. தற்போதைய டெக்னிக்கல் சூழலில் அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டுமே வியாபாரம் செய்வதற்கான சூழல் இருப்பதைப்போல் தெரிகின்றது. அனைவருமே முழுமையாக ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் வியாபாரத்தினை தவிர்ப்பது நல்லது. ஜனவரி மாத எப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வரை ஏற்ற இறக்கங்கள் (volatility) சற்று அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது. கவனம் தேவை.

18-01- 18 அன்று நடந்த எப்ஐஐ/எப்பிஐ டிரேடிங் நடவடிக்கை

9014.99 கோடி ரூபாய்க்கு வாங்கியும், 7120 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும் நிகர அளவாக 1,894.99 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தன.

18-01- 18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை

4,396.02 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 5,053.48 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 675.46 கோடி ரூபாய் விற்பனை செய்திருந்தன.

குறிப்பிட்ட சில பங்குகளில் 18-01- 18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்)

stock market

stock market

stock market

stock market

எப் அண்ட் ஓ வியாபாரத்தில் புதிய வியாபாரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பதினோரு பங்குகள் – 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால் BALRAMCHIN, DISHTV, DLF, FORTIS, GMRINFRA, HCC, HDIL, IFCI, INDIACEM, JISLJALEQS, KSCL காலாண்டு நிதிநிலை அறிக்கையை இன்று தரும் நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்)
HCLTECH, JMFINANCIL, KIRLOSENG, WIPRO

கவனிக்கவேண்டிய செய்தி

ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு சில பொருள்கள் மற்றும் சேவைகளின் வரிவிகிதத்தில் மாறுதல்களைச்
செய்துள்ளது.

*****

பொறுப்பு கைதுறப்பு:

இந்தப்பகுதி ஒரு செய்தி தொகுப்பேயாகும். இந்தப்பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை. இந்த இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பண ரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியினை படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer- disclosures.html எனும் இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாக படித்து தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்: INH200001384)


டிரெண்டிங் @ விகடன்