இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும்முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் | Stock market you must watch today (22.01.2018)

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (22/01/2018)

கடைசி தொடர்பு:11:08 (22/01/2018)

இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும்முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ் அண்ட் பி 500 இண்டெக்ஸ் 2810.30 (+12.27) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 26071.72 (+53.91) என்ற அளவிலும் வெள்ளியன்று முடிவடைந்தது. நியூயார்க் ஸ்பாட் சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1333.50 டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குருடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 68.75 டாலர் (மார்ச் 2018 ப்யூச்சர்) என்ற அளவிலும் இருந்தது.

Share market

டாலரின் மதிப்பு ரூபாயில்

நேற்று டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 63.7383 என்ற அளவில் இருந்தது.

நிஃப்டி எப்படி?

வெள்ளியன்று 10894.70ல் முடிவடைந்தது. எப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வாரம். டெக்னிக்கலாக நிஃப்டி 10823/10752/10709 போன்ற லெவல்களை சப்போர்ட்டாகவும், 10936/10978/11021 போன்ற லெவல்களை ரெசிஸ்டென்ஸாகவும் கொண்டிருக்கின்றது. காளைகளின் பலம் குறைகின்றாற்போல் தெரியவில்லை. அதனால் இதே மொமொண்டம் தொடர்ந்தால் 11000-11025 என்ற லெவல்தனைத் தொட்டுவிடும் வாய்ப்புள்ளது. இந்த வாரம் எப்&ஓ எக்ஸ்பைரி இருப்பதாலும், இந்த வாரத்தில் நான்கே டிரேடிங் தினங்கள் இருப்பதாலும் டிரேடிங் செய்யும் போது டிரேடர்களுக்கு கொஞ்சம் அதீத கவனம் தேவைப்படும். ஷார்ட் சைட் வியாபாரத்துக்கே போகக்கூடாத தருணம் இது. புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரம் செய்யாமல் இருப்பதே நல்லது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்?

19-01- 18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை 6104.97 கோடி ரூபாய்க்கு வாங்கியும், 5116.72 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும் நிகர அளவாக 988.25 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.

உள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள் (டிஐஐ) என்ன செய்தார்கள்?

19-01- 18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 3,716.09 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 3,506.23 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 209.86 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.

டெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே!

குறிப்பிட்ட சில பங்குகளில் 19-01-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம்.

Share market

Share market

ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் நிலவரம் – எல்லோரும் பிப்ரவரி காண்ட்ராக்ட்டுக்கு போயாச்சு!

பிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்கான ப்யூச்சர்ஸ்களில் 19-01- 18 அன்று ஒப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் – ஸ்பாட் விலையும் குறைந்த பட்சம் ஒரு சதவிகிதமும் அதிகரித்து ப்யூச்சர் விலை குறைந்தபட்சம் இரண்டு சதவிகிதமும் அதிகரித்திருந்தது).

Share market

Share market

Share market

உங்களுக்குத் தெரியுமா - இந்த ஷேர்களிலெல்லாம் 22-01- 18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம் செய்யக்கூடாது

எப்&ஓ வியாபாரத்தில் புதிய வியாபாரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள பதினோரு பங்குகள் – 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால்,

BALRAMCHIN, DISHTV, DLF, FORTIS, GMRINFRA, HCC, HDIL, IFCI, JISLJALEQS, KSCL

ரிசல்ட் வருகின்றது – உஷார்!

காலாண்டு நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்) SASKEN, GULFPETRO, NAVKARCORP, VAKRANGEE, JUSTDIAL, MPSLTD, VALUEIND, VGUARD, HAVELLS, TFL, GNFC, ASIANPAINT, RALLIS, MOREPENLAB, DHFL, ALKALI, VIDEOIND, NATNLSTEEL, AXISBANK, TINPLATE

கவனிக்க வேண்டிய செய்தி

இதுவரை வெளிவந்துள்ள 103 நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகளை
கணக்கில் கொண்டு ஆராய்ந்துப் பார்த்தால் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிய பயணத்துக்கு
ஆயத்தமாவதைப் போன்ற சூழலே தென்படுகின்றது என்கின்றது ஒரு செய்தி.

*****

பொறுப்பு கைதுறப்பு:

இந்தப்பகுதி ஒரு செய்தி தொகுப்பேயாகும். இந்தப்பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை. இந்த இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பண ரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer- disclosures.html எனும் இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாக படித்து தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்: INH200001384)


டிரெண்டிங் @ விகடன்