20 ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தின அணிவகுப்பில் அசத்தப்போகும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ்!  

இந்தோ திபத்

ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பு, நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியாகும். டெல்லியின் ராஜ்பாத்  வழியாக முப்படை வீரர்கள், ராணுவ பீரங்கிகள், இந்திய மாநிலங்களை விளக்கும் வாகனங்கள்  அணிவகுத்துச் செல்லும். இந்த அணிவகுப்பில், கடந்த 20 ஆண்டுகளாக இந்தோ-திபெத் எல்லை  காவல்துறை  இடம்பெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், இந்தோ-திபெத் எல்லை  காவல்துறை  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய - திபெத் எல்லைக் காவல்படை,  இந்திய - சீன எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்று. கடைசியாக, கடந்த 1998-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இந்த எல்லை காவல்படை இடம்பெற்றது. இதையடுத்து, அரசு மேற்கொண்டுள்ள சுழற்சிமுறைக் கொள்கையின் அடிப்படையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில், இந்தப் படையினர் மீண்டும் இடம்பெற உள்ளனர். உயரமான இமாலய எல்லைகள், பனி நிலப்பரப்பு, மலையேறுதல், ஸ்னோ ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்த உள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!