ஓடும் வேனில் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட மாணவன்! - டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில், இன்று காலை துப்பாக்கிமுனையில் ஒன்றாம் வகுப்பு மாணவனை மர்ம நபர்கள் கடத்திச்சென்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

delhi schoolvan
 

இன்று காலை 8 மணியளவில், டெல்லியில் ஷாதாரா பகுதியில் உள்ள ஐ.பி.ஹெச்.ஏ.எஸ் மருத்துவமனை அருகே, பள்ளி வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வாகனத்தை வழிமறித்த இருவர், வாகன ஓட்டுநரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். நிலைதடுமாறிய ஓட்டுநர்,  வாகனத்தை நிறுத்தினார். வாகனத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள், ஒன்றாம் வகுப்பு மாணவனை தூக்கிக் கொண்டு கறுப்பு நிற பைக்கில் அதிவேகமாகச் சென்றதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பள்ளி வாகன ஓட்டுநர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!