குஜராத் தேர்தல்: மோடியை எதிர்த்து போலீஸ் அதிகாரி மனைவி போட்டி!

அகமதாபாத்: குஜராத முதலமைச்சர் ந்ரேந்திர மோடியை எதிர்த்து பணி நீக்கம்  செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி மனைவி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக  நிறுத்தப்பட்டுள்ளார்.
 
குஜராத் சட்டசபை தேர்தலில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மணிநகர் தொகுதியில்  போட்டியிடுகிறார்.அவரை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்று இதுவரை  அறிவிக்கப்படாமல் இருந்தது.
 
இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட குஜராத் போலீஸ் அதிகாரி சஞ்சய் பட் என்பவரின்  மனைவி, சுவேதா பட்  என்பவர் மோடியை எதிர்த்து மணிநகர் தொகுதியில் காங்கிரஸ்  சார்பில் போட்டியிடுகிறார்.
 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுவேதா பட்,"நரேந்திர மோடியை எதிர்த்து  காங்கிரஸ் வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன்.ஜனநாயகத்தை விட்டு நாம்  வெகுதூரம் விலகிச் சென்று விட்டோம். ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட நாம்  அனைவரும் நம்மால் இயன்றதை செய்தாக வேண்டும்.
 
ஜனநாயக விரோத சக்திகளை வீழ்த்தி மக்களாட்சியை நிலைநாட்டுவதற்கான  முதல்படியாக மோடியை எதிர்த்து போட்டியிட நான் முடிவு செய்துள்ளேன்” என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!