கேரள அரசின் சுற்றறிக்கை! - நிராகரித்து தேசியக்கொடி ஏற்றிய மோகன் பகவத்

கேரள மாநில அரசின் எதிர்ப்பை மீறி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அங்கு தேசியக்கொடி ஏற்றினார்.


மோகன் பகவத்

குடியரசு தினத்தன்று பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே கேரள அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்தச் சுற்றறிக்கையில் ‘ஒவ்வொரு பள்ளியிலும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே குடியரசு தினத்தன்று கொடியேற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களே கொடியேற்ற வேண்டும்’ என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கேரள அரசின் இந்த உத்தரவு, பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது. மோகன் பகவத் கொடியேற்றக் கூடாது என்று கேரள அரசு மறைமுகமாக தடை விதித்துள்ளதாகக் கூறப்பட்டது. 

இதனையடுத்து கேரள அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை நிராகரிப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறியது. திட்டமிட்டபடி, தனியார் பள்ளியில் மோகன் பகவத் கொடியேற்றுவார் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்தது. 

மோகன் பகவத்
 

இந்நிலையில் மோகன் பகவத் இன்று காலை தனியார் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றிவைத்தார். குடியரசுத் தினத்தில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான விதிகள் குறித்து கேரள அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை நிராகரித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!