வெளியிடப்பட்ட நேரம்: 06:11 (27/01/2018)

கடைசி தொடர்பு:06:11 (27/01/2018)

தடையை மீறி கேரளாவில் கொடியேற்றினார் மோகன் பகவத்..!

கேரளாவின் பாலக்காட்டிலுள்ள பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் கொடியேற்றிவைத்தார். 

பாலக்காட்டிலுள்ள கர்ணகிஅம்மன் பள்ளியில் கடந்த சுதந்திர தினத்தின்போது, மோகன் பகவத் கொடியேற்றினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேப்போல இந்த ஆண்டு குடியரசு தினத்தில் வைஷா வித்ய பீடம் மேல்நிலைப் பள்ளியில் மோகன் பகவத் கொடியேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, குடியரசுத் தின விழாவின்போது, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் அதன் தலைவர்களே கொடியேற்ற வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டிருந்தது. மோகன் பகவத் கொடியேற்றுவதைத் தடுக்கத்தான் இந்த உத்தரவு என்று கூறப்பட்டது. இருப்பினும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அந்தப் பள்ளியில் கொடியேற்றினார்.