மகாராஷ்ட்ராவில் மினி பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து!

மகாராஷ்ட்ரா கோலாபூர் நகரத்தில், நேற்று நள்ளிரவு மினி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் 12 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான மினி பஸ்

இந்த விபத்தால், பேருந்தில் பயணித்த பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். மினி பஸ், ரத்னகிரியிலிருந்து கோலாபூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. முதற்கட்டத் தகவலின்படி, பேருந்தின் ஓட்டுநர், வாகனத்தின் கட்டுப்பாட்டை எதிர்பாராத விதமாக இழந்துள்ளார் எனவும் அதுவே விபத்துக்குக் காரணமாகவும் அமைந்துவிட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் போலீஸ் மற்றும் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியையும் விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!