40-வது முறையாக `மன் கி பாத்' மூலம் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி

அகில இந்திய வானொலி மூலம் மாதம் ஒரு முறை 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக  உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று மன் கி பாத்தின் மூலம் 40வது முறையாக உரையாற்றுகிறார் மோடி. அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை ஆரம்பமாகியுள்ளது.

சென்ற மாத மன் கி பாத் உரையின் போது பிரதமர், `ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் மார்ச் மாதம் 10-ம் தேதி வரை நாடு முழுவதும் ஒரு தூய்மை கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம், நகர்ப்புறங்களில் நாம் எந்தளவுக்கு சுகாதாரத்தன்மையை உயர்த்தியுள்ளோம் என்பது தெரிய வரும்' என்று பேசினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!