வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (29/01/2018)

கடைசி தொடர்பு:08:49 (29/01/2018)

ராஜஸ்தான், மேற்கு வங்கத்தின் 3 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்! - வாக்குப்பதிவு தொடக்கம்

ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று  மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது. 

rajasthan
 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார், அஜ்மீர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உலுபேரியா ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

ராஜஸ்தானில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் ராஜ்புத் சமூகத்தினர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளதால் பா.ஜ.கவுக்கு சவால் காத்திருக்கிறது. இந்த மூன்று தொகுதி இடைத்தேர்தலும் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க