வெளியிடப்பட்ட நேரம்: 09:14 (29/01/2018)

கடைசி தொடர்பு:11:59 (30/01/2018)

இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ் அண்ட் பி 500 இண்டெக்ஸ் 2872.87 (+33.62) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 26616.71 (+223.92) என்ற அளவிலும் சென்ற வாரத்தின் இறுதியில் முடிவடைந்தது.  நியூயார்க் ஸ்பாட் சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1351.10 டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குருடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 70.42 டாலர்  என்ற அளவிலும் இருந்தது.
டாலரின் மதிப்பு ரூபாயில்

நேற்று டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 63.4983 என்ற அளவில் இருந்தது.

நிஃப்டி எப்படி?

சென்றவாரத்தின் கடைசி வியாபார நாள்தனில் நிப்டி 11069.65ல் முடிவடைந்தது. இன்று  மத்திய பட்ஜெட் வெளிவர இருக்கும் வாரத்தின் முதல் டிரேடிங் தினமாகும். டெக்னிக்கலாக நிஃப்டி 11021/10972/10939 போன்ற லெவல்களை சப்போர்ட்டாகவும், 11107/11145/11178 போன்ற லெவல்களை ரெசிஸ்டென்ஸாகவும் கொண்டிருக்கின்றது.  தொடர்ந்து 11110 என்ற லெவலுக்கு மேலேயே வால்யூமுடன் வியாபாரம் நடந்துகொண்டிருந்தால் 11200 அளவு வரை செல்வதற்கான சாத்தியக்கூறு இருக்கின்றது எனும் டெக்னிக்கல் சூழல் சென்றவாரத்தின் இறுதியில் நிலவுகின்றது எனலாம். இறக்கம் வந்தால் 10870 வரை சென்று விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ள வேண்டும். பட்ஜெட்குறித்த எதிர்பார்ப்புகளும், காலாண்டு முடிவுகளும், செய்திகளுமே சந்தையின் போக்கை நிர்ணயம் செய்வதாய் இருக்கும். கேப் ஒப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே வியாபாரம் செய்ய முயற்சி செய்வதே நல்லது.  ஷார்ட் சைட் வியாபாரத்திற்கே போகக்கூடாத தருணம் இது.  புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரம் செய்யாமல் இருப்பதே நல்லது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்?

25-01-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை
9091.88 கோடி ரூபாய்க்கு வாங்கியும், 8154.57 கோடி ரூபாய்  அளவுக்கு விற்றும் நிகர அளவாக 937.31 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.

உள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்?

25-01-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால்  6756.82 கோடி ரூபாய்க்கு வாங்கியும், 7722.49 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 965.67 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.

டெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே!

குறிப்பிட்ட சில பங்குகளில் 25-01-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம்.
 

ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் நிலவரம் –பிப்ரவரி மாத  எக்ஸ்பைரிக்கான காண்ட்ராக்ட்களில்
 
பிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்கான ப்யூச்சர்ஸ்களில் 25-01-18 அன்று ஒப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்).


பல்க்கா வியாபாரம் நடந்திருக்கே!

25-01-18 அன்று நடந்த சில பல்க் டீல்கள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்)


உங்களுக்கு தெரியுமா - இந்த ஷேரில் 29-01-18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம் செய்யக்கூடாது என்பது!

எப்&ஓ வியாபாரத்தில் புதிய வியாபாரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குதனின் என்எஸ்சி சிம்பல் தரப்பட்டுள்ளது. – 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால்

JPASSOCIAT


ரிசல்ட் வருகின்றது – உஷார்!

காலாண்டு நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்).

APARINDS, CENTURYTEX, BINANIIND, DENORA, ASAL, ASTRAMICRO, ASTRON, BALAMINES, ELGIEQUIP, EMAMILTD, EMKAY, GULPOLY, HBSTOCK, IMFA, INDBANK, HSCL, HSIL, HDFC, IDFC, KOTHARIPET, INDNIPPON, INEOSSTYRO, INOXLEISUR, LAMBODHARA, LAURUSLABS, LAXMIMACH, NBVENTURES. RBL, RCOM, MAHLOG, MAHSCOOTER, ORIENTCEM, MUNJALAU, RKFORGE, SPARC, SELMCL, TRF, TRIDENT, SUBEX, SUNDARMFIN, SUPPETRO, SHAKTIPUMP, TECHM, SIS, SIYSIL, WOCKPHARMA, VAIBHAVGBL.

பொறுப்பு கைதுறப்பு: இந்தப்பகுதி ஒரு செய்தி தொகுப்பேயாகும்.  இந்தப்பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை.  இந்த இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல.  பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பண ரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html  எனும் இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்:  INH200001384)


டிரெண்டிங் @ விகடன்