ஆண்டின் முதல் கூட்டத்தொடர்! - அம்பேத்கர் கூற்றை மேற்கோள்காட்டி உரையைத் தொடங்கிய ஜனாதிபதி

2018-ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 

ramnath govind
 

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றபின் நடக்கும் முதல் கூட்டத் தொடர் இது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவரை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் குடியரசுத்தலைவர் உரையுடன் இந்த ஆண்டின் முதல்கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அம்பேத்கரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி உரையைத் தொடங்கினார்.

குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்:

* சமூக, பொருளாதார ஜனநாயகமின்றி அரசியல் ஜனநாயகம் வெற்றி பெறாது’ என்னும் அம்பேத்கரின் கூற்றை அரசு பின்பற்றுகிறது. 

* சமூக நீதி, பொருளாதார சமநிலையை உருவாக்குவதில் எனது தலைமையிலான அரசு பாடுபட்டு வருகிறது.

* 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும்போது, நம் நாட்டை முழுவதும் தூய்மைப்படுத்தியிருக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. 

* புதிய இந்தியாவை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

* முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டம் இயற்றப்படும் என்று நம்புகிறேன்.

* பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

* புதிதாக 3 லட்சம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான திட்டம் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!