2019-ம் ஆண்டுக்குள் 80% கங்கை நதி சுத்தம் செய்யப்படும்..! மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு | 80% of Ganga River will be cleaned before 2019. Nithin Gadkari explains the plan!

வெளியிடப்பட்ட நேரம்: 01:42 (30/01/2018)

கடைசி தொடர்பு:08:42 (30/01/2018)

2019-ம் ஆண்டுக்குள் 80% கங்கை நதி சுத்தம் செய்யப்படும்..! மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

ந்தியாவின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக அறியப்படும் கங்கை நதியின் தற்போதைய நிலைமை அனைவரும் அறிந்ததே! நதியைச் சுத்தம் செய்து, பழைய நிலைக்குக் கொண்டுசெல்ல நிறுவப்பட்ட திட்டமே நமாமி கங்கைத் திட்டம் (Namami Gange Programme). இதன் தற்போதைய நிலையை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பகிர்ந்துகொண்டார். அதன்படி, 2019-ம் ஆண்டுக்குள், 80% கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று தெரிவித்தார். முதற்கட்டமாக, கங்கை நதிக்கு மாசு ஏற்படுத்தும் முதல் 10 நகரங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், இதில் கான்பூர் நகரத்துக்குத்தான் முதலிடம் என்றும் விளக்கினார்.

கங்கை நதி

``உத்தரப் பிரதேச அரசிடம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். இதன்படி சர்க்கரை  ஆலைகள், காகிதத் தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழில்துறை வளாகங்களில் இருந்து வரும் கழிவுகள் கங்கை நதிக்குள் சென்று கலக்கக் கூடாது. இத்தகைய கழிவுநீர் கலப்புதான் கங்கையின் தற்போதைய நிலைக்கு மிக முக்கிய காரணம். இந்த நமாமி கங்கை திட்டம் சற்றே சவாலான திட்டம்தான். கங்கை நதி பல நகரங்களைத் தொட்டுச் செல்வதால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையில் மாசு இருக்கிறது. இதைச் சரி செய்ய, நாம் கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் நிலவும் ஆற்று மாசுபாடு குறைப்பு நடவடிக்கைகள் குறித்து நன்கு ஆராய்ந்த பின்னரே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்காக பிரத்தியேகமாக 2,200 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் கொண்டே இந்தத் திட்டம் உயிர்பெற்றுள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க