காயம்பட்ட கன்றுக்குட்டி! உருகவைத்த தாய்ப்பசுவின் செயல்

காயமடைந்த கன்றுக்குட்டியைக் கொண்டுசென்ற வாகனத்தின் பின்னால் தாய்ப்பசு ஓடிவந்த காட்சி நெகிழ வைக்கிறது.

தாய் பசு

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 25-ம் தேதி இரண்டு மாத கன்றுக்குட்டிக்கு காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளது. இதைப் பார்த்த தாய்ப்பசு கூச்சல் எழுப்பி வீட்டுக்குள் இருந்தவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. பசுவின் உரிமையாளர் கன்றுக்குட்டியை வாகனத்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

கன்றுக்குட்டியைக் கொண்டுசென்ற வாகனத்தின் பின்னாலேயே தாய்ப்பசு மூச்சிரைக்க ஓடிச்சென்ற காட்சி அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கால்நடை மருத்துவனையைச் சென்றடையும்வரை வாகனத்தைப் பின் தொடர்ந்துள்ளது தாய்ப்பசு. இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். கடந்த வியாழன் (25.1.2018) அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கன்றுக்குட்டி, ஞாயிறு (28.1.2018) அன்றுதான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. அதுவரை மருத்துவமனை வாசலிலேயே தாய்ப் பசு நின்றுகொண்டிருந்ததாம்! 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!