21 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா... தொடர்ந்து அதிரடி காட்டும் ஜியோ

ஜியோ

வாடிக்கையாளர்களை அசத்தும் வகையில் தொடர்ச்சியாக ஆஃபர்களை அறிவித்து வருகிறது ஜியோ. கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜனவரி 26-ம் தேதிதான் வழக்கமான பிளான்களில் மாற்றம் செய்திருந்தது. சில பிளான்களின் விலையை 50 ரூபாய் குறைத்து சில பிளான்களின் டேட்டா அளவை அதிகரித்திருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் மிகவும் குறைவான விலையில் டேட்டா பேக்குகளை அறிவித்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் பயன்பெரும் வகையில் நான்கு புதிய பூஸ்டர் பேக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பூஸ்டர் பேக்குகள்

ஒரு நாளைக்கு தரப்படும் டேட்டா தீர்ந்துவிட்ட பிறகு டேட்டா தேவைப்பட்டால் இந்த பூஸ்டர் பேக்குகளைப் பயன்படுத்தி கூடுதல் டேட்டாவைப் பெற முடியும். 11 ரூபாய் பேக் மூலமாக 400MB அதிவேக 4ஜி டேட்டாவைப் பெறலாம். 21 ரூபாய் பேக் மூலமாக 1GB டேட்டாவையும் 51 ரூபாய் பேக் மூலமாக 3GB டேட்டாவையும் மற்றும் 101 ரூபாய் பேக் மூலமாக 6GB டேட்டாவையும் பெற முடியும். ஏற்கெனவே பயன்படுத்தப்படும் பிளானின் வேலிடிட்டியே இதற்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டேட்டா  தீர்ந்த பிறகு இணைய வேகம்  64kbps ஆகக் குறைக்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!