`கோவாவில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்படும்!' - மனோகர் பாரிக்கர் நம்பிக்கை

பல முன்னேற்றமடைந்துள்ள இந்திய மாநிலங்களின் பட்டியலில் கோவாவுக்கும் இடமுண்டு. பணமற்ற பரிவர்த்தனை, கல்வி எனப் பல விஷயங்களில் கோவா முன்னிலை பெற்று திகழ்கிறது. இந்நிலையில், கோவாவில் திறந்தவெளியில் மலம் கழித்தலை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தகவல் தெரிவித்துள்ளார். 

மனோகர் பாரிக்கர்

இது குறித்து அவர், `சமீபத்தில், கோவாவின் ஒரு கிராமப்புறப் பகுதிக்குச் சென்றிருந்தேன். அங்கு இருப்பவர்களிடம் கழிப்பறை வசதி குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, கோவாவில் இருக்கும் பல கிராமப் பஞ்சாயத்துகளில் 100 முதல் 250 கழிப்பறை வரை குறைவாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். பின்னர், அங்கு இருந்த பெண்களிடம் இந்தப் பிரச்னை குறித்து கேட்டேன். அவர்கள் காலையில் காட்டுக்குச் சென்றுதான் உடல் உபாதைகளை கழிப்பார்கள் என்று சொன்னார்கள். இப்படி கோவாவைச் சேர்ந்த எந்தப் பெண்ணும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, கோவாவில் திறந்தவெளி மலம் கழித்தலை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதிக்குள் கோவாவில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்படும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!