Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் 2018 - ’வருமான வரியில் மாற்றமில்லை!’ #Budget2018 #LiveUpdates

Union Budget 2018 Updates:

பட்ஜெட் உரை நிறைவுபெற்றது!

* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ரூ.250 கோடி ஆண்டு வருவாய் உடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25% ஆக குறைப்பு. 

* விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படும். 

* கல்விக்கான செஸ் வரி 3% ஆக இருந்தது. தற்போது 4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

* மொபைல் போன்களுக்கான 20% ஆக உயர்வு. முன்னர் 15% ஆக இருந்தது. 

* தனிநபர் வருமானத்தில் நிரந்தர கழிவுமுறை மீண்டும் அமல்படுத்தப்படும். மாத ஊதியக்காரர்கள் மருத்துவம், போக்குவரத்து செலவுகளில் ரூ.40,000 நிரந்தர கழிவாகப் பெறலாம். 

* கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர் வருமான வரிவிதிப்பில் மத்திய அரசு பல்வேறு நல்ல மாற்றங்களை செய்துள்ளது. எனவே தனிநபர்     வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை. 

* வருமான வரிவிலக்கு உச்சவரம்பு  ரூ.2.50 லட்சமாக தொடரும். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனாலும் அரசுக்கு  எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் இல்லை. 

* தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை. 

* நிதி பற்றாக்குறையானது ஜிடிபியில் 3.3% ஆக இருக்கும்.  

* வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது. 

* குடியரசுத்தலைவர், ஆளுநர், துணை குடியரசுத்தலைவரின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.


* குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. துணை குடியரசுத்தலைவரின் சம்பளம் 4 லட்சமாக உயர்வு. 

* ஆளுநரின் சம்பளம் ரூ.3.5 லட்சமாக உயர்வு.

* ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* 4,000 -க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.

* ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்

* இந்தியா  முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் 5 லட்சம் வைஃபை ஸ்பாட் அமைக்கப்படும்.

* உதான் திட்டத்தின் கீழ் புதிதாக 56 விமான நிலையங்கள் இணைக்கப்படும். 


* ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு. 

* ஜவுளித்துறைக்கு ரூ.7140 கோடி ஒதுக்கீடு.

* அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சிசிடிவி, வைஃபை வசதி வழங்கப்படும்.  

* ’எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்கான நிதி 50 சதவிகிதம் உயர்வு. எஸ்.சி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.56,619 கோடியும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.39,135 கோடியும் ஒதுக்கீடு. 

* மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய  மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு

* 10 கோடி ஏழைக் குடும்பங்களின் சுகாதாரத்துக்காக, தலா ரூ.5 லட்ச ரூபாய் வழங்கப்படும். இதற்காக, ரூ.1,200 கோடி ஒதுக்கீடு. இது, உலகின் மிகப்பெரிய மருத்துவத் திட்டம். 

 

 

* கிராமச் சாலைகள் மேம்பாட்டில் அரசு முழுக் கவனம் செலுத்தும். 

* விவசாயிகளின் விளைபொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்பொருட்டு, நாடு முழுவதும் பிரமாண்டமான உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சிறப்பு நிதியுதவி.

* அடுத்த ஒரு வருடத்துக்குள், 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை.  

* 3 நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு அரசு மருத்துக்கல்லூரி வீதம் 24 மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.

 

* குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும். 

* பிடெக் படித்த மாணவர்கள் 1000 பேருக்கு பிஎச்டி படிக்க நிதியுதவி வழங்கப்படும்.

* பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதில் டிஜிட்டல் பலகை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

* விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* வரும் ஆண்டுக்கான விவசாயக்கடன் இலக்கு ரூ 11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.

* சுமார் 2 கோடி கழிப்பறைகள் ஒரு வருடத்தில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் கட்டப்படும்.

* 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு.

* தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு. 



* அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

* 4 கோடி ஏழை வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளோம். 

* 24 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 

* இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது.

* உணவுப்பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு.   

* இனிமேல் கால்நடை வளப்போர், மீனவர்களுக்கு கிசான் கிரடிட் கார்டு (kisan credit card) வழங்கப்படும். இதுவரை விவசாயிகளுக்கு மட்டுமே       வழங்கப்பட்டு வந்தது. 

* உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ்  8 கோடி கிராமப்புற பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு  (LPG) இணைப்பு வழங்க முடிவு. 

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75 கோடி வழங்க முடிவு. 

* 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும் 

* விவசாய சந்தைகளை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் துறையில் ரூ.500 கோடி நிதியுடன் ஆப்பரேசன் க்ரீன் எனும் திட்டம் செயல்படுத்தப்படும். 

*  மீன்வளத்துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

வேளாண்மை, கிராம மேம்பாடு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

நாட்டின் இயற்கை வளங்கள் நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் ஏலம் விடப்படுகின்றன. 

*விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

 

*மோடி தலைமையிலான அரசு 2014ம் ஆண்டு பொறுப்பேற்றது.  மத்திய அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.5% ஆக தக்கவைத்துள்ளோம். 8% வளர்ச்சியை அடைவதில் உறுதியாக உள்ளோம். 

*உலகின் 7வது வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

*நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. 

*அதிவேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 

*வறுமையை குறைப்போம் என்று எங்கள் அரசு வாக்கு கொடுத்தது. கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம். 

*2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்  உரையை வாசிக்க தொடங்கினார் அருண் ஜெட்லி.

*ட்ஜெட் உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில்  முதல்முறையாக பட்ஜெட் உரை இந்தி மொழியில் வாசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் ஜெட்லி  பட்ஜெட் உரையில் பெரும்பலான பகுதிகளை இந்தியிலும்,சில முக்கிய பகுதிகளை ஆங்கிலத்திலும் வாசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

*ட்ஜெட் எதிரொலி - பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது. 

*ன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ‘ இந்த பட்ஜெட் வளர்ச்சியை நோக்கி கல்வி, சுகாதாரம் உற்பத்தி  மேலாண்மை கொண்டதாக இருக்கும்’ என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நம்பிக்கை தெரித்துள்ளார். 

 

budget 2018

பட்ஜெட் தாக்கல் செய்ய  நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்துக்கு வந்தார்.  
 

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி

budget 2018

நிதி நிலை அறிக்கை ஆவணங்கள் நாடாளுமன்றத்துக்கு மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. 

budget 2018

2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்குறித்து அனைவர் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல்செய்யும் கடைசி ’முழு அளவிலான’ நிதிநிலை அறிக்கை இது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சாதகமாக நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு என மோடி அரசின் மீது மக்கள் சற்று அதிருப்தியில் இருப்பதால், இந்த பட்ஜெட் மக்களுக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், பொதுபட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டுள்ளதால் முக்கிய ரயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. 2018-19ம் நிதியாண்டுக்கான  பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் 2018

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement