’மனைவியுடன் வாக்குவாதம்!’ - துப்பாக்கியால் சுட்டு தற்கொலைசெய்துகொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால், மகாராஷ்டிரா மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மகாராஷ்டிரா மாநிலத்தின் துலே பகுதியில் அமைந்துள்ள காவல்நிலையத்தில், கிரைம் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்துவருபவர், ராம்சிங் பர்தேசி (58). மனைவியுடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, புதன்கிழமை இரவில் நீண்ட நேரம் அவர்களிடையே கடும் விவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியநிலையில், தனது துப்பாக்கியை எடுத்து மனைவியின் கண்முன்னே சுட்டு, பர்தேசி தற்கொலைசெய்துகொண்டார். பர்தேசி மனைவியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனைக்குக்  கொண்டுவரும் முன்னரே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து துலே போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி ராம்குமார், ‘’கணவன் - மனைவி இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் பர்தேசி தற்கொலை செய்துகொண்டார். துலே அரசு மருத்துவமனையில், அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது’’ என்றார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!