வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (01/02/2018)

கடைசி தொடர்பு:15:14 (01/02/2018)

இடைத்தேர்தல்! - ஆளும் மாநிலத்தில் பா.ஜ.க படுதோல்வி 

ராஜஸ்தானில் மூன்று தொகுதிகளில்  நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆளும்கட்சியான பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.

bypoll
 

ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிளுக்கான தேர்தல்  ஜனவரி 29ம் தேதி நடந்தது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராஜஸ்தான் மாநிலம் அல்வார், அஜ்மீர் மக்களவை தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். ராஜஸ்தானின் மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியிலும் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்றுள்ளது.  மண்டல்கர் தொகுதியில் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.கவை வீழ்த்தியது காங்கிரஸ். 

இதேபோன்று மேற்குவங்க மாநிலத்தில் உள்ள உல்பெரியா மக்களவை தொகுதி மற்றும் நோவாபாரா ச ட்டப்பேரவைத் தொகுதியிலும் பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது. அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்த இரு மாநில இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க தோல்வியை தழுவியுள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ‘இது வெறும் ட்ரெயிலர்தான். பா.ஜ.கவை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதற்கு இது எடுத்துக்காட்டு’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

sachin piolet

பிரசார களத்தில் சச்சின் பைலட்...

ராஜஸ்தானில் அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு போட்டியாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் சச்சின் பைலட் பிரசாரம் மேற்கொண்டார். காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துவரும் சச்சின் பைலட் ‘இந்த வெற்றி பா.ஜ.க அகந்தைக்கு எதிரான வெற்றி’ என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க