``ஏழைகளுக்குப் புதிய திட்டம்” - பட்ஜெட் குறித்து மோடி பெருமிதம்

மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்குப் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

Modi

 

2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இதை தாக்கல் செய்தார். ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்வது சென்ற ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. ஆகவே, ரயில்வேக்கான அறிவிப்புகளும் இதே பட்ஜெட்டில் இடம்பெற்றன. பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இருந்தாலும், பலரும் எதிர்பார்த்த வருமான வரி உச்ச வரம்பு மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றமளித்துள்ளது. வழக்கம்போல ஒரு தரப்பினர் பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர். இன்னொரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, “பட்ஜெட்டில் விளைபொருள்களை விற்பனை மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்ல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதார விலை குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கப்படும். மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும். பட்ஜெட்டில் அனைத்துத் துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கான புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. பட்ஜெட்டில் விவசாயிகளின் அச்சம் போக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியை வேகப்படுத்தும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது” என்று பெருமிதமடைந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!