ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு! கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிகம் | Budget2018: Rs.1.48 lakh crore announced for railway

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (01/02/2018)

கடைசி தொடர்பு:19:30 (01/02/2018)

ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு! கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிகம்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே 2018 -19-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கு முக்கியவத்துவம் அளிக்கப்பட்ட அதே வேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவசாய கடன்கள் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மேலும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் வருமான உச்சவரம்பில் மாற்றம் இல்லை உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. 

அதேபோல், முன்பு இல்லாத அளவுக்கு ரயில்வே துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே துறைக்கு ரூ.1,48,528 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரயில்வே துறைக்கு 1,31,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், சென்னை பெரம்பூரில் அதிநவீன ரயில்பெட்டிகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகின. ரயில்வே துறைக்கு அறிவித்துள்ள முக்கிய அம்சங்கள்;

* 600 பெரிய ரயில்நிலையங்கள் புதுப்பிப்பு.

* அனைத்து ரயில்களிலும் படிப்படியாக வைஃபை, சிசிடிவி வசதி அமைக்க நடவடிக்கை.

* 4,000-க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமனம்.

* ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு முக்கியத்துவம்.

* 4000 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் பாதை.

* 25,000 பயணிகள் வரும் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி.

* ரயில்வே துறைக்குச் சொந்தமான இடங்கள் வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

* பெங்களூருவில் 160 கிலோமீட்டர் நீளமுள்ள புறநகர் ரயில் பாதை அமைக்கப்படும்.

* 12,000 ரயில் வாகன்கள், 5,160 ரயில் பெட்டிகள் வாங்கப்படும்.

* குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க