வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (01/02/2018)

கடைசி தொடர்பு:18:10 (01/02/2018)

பட்ஜெட் தாக்கல் எதிரொலி - இந்தப் பொருள்களெல்லாம் விலை உயருகிறது!

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

விலை உயரும் பொருள்கள்:

* மொபைல் போன்கள் 
* எல்.இ.டி. மற்றும் எல்.சி.டி. டிவி பேனல்கள்
* கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்  
* தங்கம் மற்றும் வெள்ளி 
* காய்கறிகள், பழரசங்கள்
* கண் கண்ணாடிகள் 
* பர்னிச்சர்கள் 
* விளக்குகள் 
* கைக்கடிகாரங்கள், கடிகாரங்கள் மற்றும் பாக்கெட் கடிகாரங்கள் 
* டிரை சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், சக்கரம் பொருத்தப்பட்ட பொம்மைகள்
* வீடியோ கேம் கன்சோல்கள் 
* சிகரெட்டுகள், லைட்டர்கள் மற்றும் மெழுகுவத்திகள்
* காலணிகள்
* வைரம் 
* வாசனை திரவியங்கள் மற்றும் கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் திரவங்கள் 
*  கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கான டயர்கள் 

விலைகுறையும் பொருள்கள்:

* சோலார் பேனல்கள் தயாரிப்பில் பயன்படும் கண்ணாடிகள் 
* முந்திரிப் பருப்புகள் 
* காது கேட்கும் திறனற்றவர்களுக்கு உதவும் வகையிலான எலெக்ட்ரானிக் கருவிகள் தயாரிப்பில் பயன்படும் மூலப் பொருள்கள்.