`பட்ஜெட்மீது அதிருப்தி' பா.ஜ.க கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு முழுக்கு?

நேற்று வெளியான பட்ஜெட்டில், ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தியடைந்த அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க கூட்டணியை முறிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

2018-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அரசு நேற்று தாக்கல்செய்தது.  இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பட்ஜெட்மீது விமர்சனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையே, மத்திய பட்ஜெட்மீது பா.ஜ.க-வின் முக்கிய கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம், கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகவில்லை. இதேபோல விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம்குறித்தும் அறிவிப்புகள் இல்லை. 

இதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், பா.ஜ.க-வுடனான கூட்டணியில் தொடர வேண்டாம் என்றும், தெலுங்கு தேசம் கட்சி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், பா.ஜ.க-வுடன் கூட்டணியில் தொடர்வதுகுறித்து முடிவெடுக்க, வரும் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்கள் கூட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் இறுதிமுடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக,  அக்கட்சியின் எம்.பி., டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க கூட்டணியில் நீட்டிக்க முயல்வதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!