`பத்மாவத்' திரைப்படம் ஓடிய தியேட்டரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

பத்மாவத் திரைப்படம் ஓடிய திரையரங்கில், 19 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டுள்ளார்.

THEATRE

 

நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்ட 'பத்மாவத்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வசூல் ரூ.200 கோடியை நெருங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. 

ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது நண்பருடன் நகரிலுள்ள பிரசாந்த் திரையரங்குக்கு 'பத்மாவத்' திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளார். அந்த நண்பர், 2 மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்மூலம் அந்தப் பெண்ணுக்கு அறிமுகமானவர். திரையரங்கில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதோடு, அவரை பாலியல் பலாத்காரம்செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவல்நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில், ஜனவரி 31-ம் தேதி, அந்த நபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு 376-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!