வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (03/02/2018)

கடைசி தொடர்பு:09:00 (03/02/2018)

'மோடிகேர்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக வருடத்துக்கு 11,000 கோடி செலவாகும்!

ற்போது வெளியான பட்ஜெட்டில், 'மோடிகேர்' என்று அழைக்கப்படும் 'தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கமே, இந்தியாவில் இருக்கும் 50 சதவிகித மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதே! தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் திட்டத்துக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் வருடத்துக்கு 11,000 கோடிகளை ஒன்றாகச் சேர்ந்து ஒதுக்கவேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் 60 சதவிகித செலவை மத்திய அரசு அளிக்க, 40 சதவிகித செலவை அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மோடிகேர் திட்டம்

முதற்கட்டமாக, இந்தியாவின் பாதி மக்கள் தொகைக்காக மட்டுமே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டாலும், 'மோடிகேர்' தான் உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக இருக்கும். இதன்மூலம், 2011 சென்சஸ் அடிப்படையில் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வருடத்துக்கு அதிகபட்சமாக 5 லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகள் இலவசமாகப் பார்க்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பீட்டில் இணைக்க ஆகும் சந்தா செலவு, தோராயமாக ரூபாய் 1,100.

இந்த வருடம் வரவிருக்கும் சுதந்திர தினத்தின்போதோ அல்லது காந்தி ஜெயந்தியின் போதோ 'மோடிகேர்' திட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க